லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா நடித்துள்ள  ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் 28-ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகிறது.

அத்துடன் நயன்தாரா கைவசம்  உள்ள  ‘தளபதி 63’, ‘கொலையுதிர்க் காலம், ‘சயிர நரசிம்மரெட்டி, லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நயன்தாரா, அடுத்து   நடிக்கவுள்ள படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த படத்தை  ‘அண்டாவ காணோம்’ என்ற படத்தை இயக்கிய  வேல்மதி என்பவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை   கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கவிருப்பதாகவும், இதுகுறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று முடிவடைந்த நிலையில், சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.