யக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் மீண்டும் நடிக்கும் இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த நிலையில், இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள ஷங்கர் கமல் கூட்டணியில் உருவாகும் , இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் நடிக்கிறார். கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், நெடுமுடிவேணு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தான் இசையமைக்க ஒப்பந்தம்செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனிருத்,  இந்தியன் 2 படத்துக்கு  இசையமைக்க, 2017ம் ஆண்டிலேயே தன்னை ஷங்கர் கேட்டுக் கொண்டதாகவும், அதனால் அப்போதில் இருந்தே அவர் சொன்ன பாடலின் சூழலுக்கு தான் பல டியூன்களை தயார் செய்ய தொடங்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.