பிறந்தநாள்: இந்திராகாந்தி நினைவிடத்தில் சோனியா ராகுல் மரியாதை!

Must read

 
sonia3
டில்லி,
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின்  பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவை ஆண்ட முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. இந்தியாவின் முதன் அணு சோதனையை நடத்திய வரும இவரே. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சிசெய்து, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திராகாந்தியின் நினைவுநாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திராவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் மரியாதை செலுத்தியுள்ளார்.

More articles

2 COMMENTS

Latest article