டில்லி,

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் டுவிட் செய்துள்ளார்.

ஏமனிலிருந்து துபாய்க்கு சென்ற இந்திய கப்பல் சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதனுடன் அதில் இருந்த 10 இந்தியர்களையும் கடத்திச் சென்றனர். ‛அல் கவுசர்’ என்ற அந்த சரக்கு கப்பல் ஏற்கனவே  மீட்கப்பட்டது.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளா

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அதில்,  ‛அல் கவுசர்’ கப்பலிலிருந்து சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 10 இந்தியர்க ளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த சோமாலிய அரசு, கால்முடக் மாநில அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எனது நன்றி.

மேலும், இதற்கு உதவியாக இருந்த  கென்யாவிற்கான இந்திய உயர் ஆணையர் சுசித்ரா துரையின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.