சென்னை: ரயிலில் பக்கத்து சீட் காரருக்கு இடையயூறாக சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’ விதிப்பு உள்பட பல்வேறு புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அல்லது சத்தமாக செல்போனில் பேசினாலோ அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் ரயில்வே துறை ரயிலில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  பயணிகளின் ரயில் பயணத்தை வசதியாக மாற்றும் வகையில், அதிக ஒலி எழுப்பும் இசை மற்றும் தொலைபேசியில் சத்தமாக பேசுவதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.

இயர்போன் இல்லாமல் இசையைக் கேட்பதையோ அல்லது சத்தமாக தொலைபேசியில் பேசுவதையோ தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,   குழுவாகப் பயணிக்கும் பயணிகள் வெகுநேரம் வரை பேசக் கூடாது என்றும், இரவு தவிர அனைத்து விளக்குகளும் இரவு 10 மணிக்குப் பிறகு அணைக்கப்படும் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன.

விதிகளை பின்பற்றாத பயணிகள் மீது ரயில்வே சட்ட விதிகளின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி,

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாகப் பேசினாலோ, சத்தமாகப் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்கப்படும்.

இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது.
நள்ளிரவில் சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிக்கும் நடந்துகொள்ளக்கூடாது பேசக்கூடாது,

மேலும் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

ரயில்வேயின்  புதிய விதிமுறைகள் பயணிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.