அமெரிக்காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப்படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சுஷ்மிதா சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

54 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சுஷ்மிதா சுக்லா காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர். இவரது நியமனத்தை பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழு அங்கீகரித்துள்ளதாக நியூயார்க் மத்திய வங்கி வியாழனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுஷ்மிதா சுக்லா

“நியூயார்க் ஃபெட் போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று சுஷ்மிதா சுக்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது அனுபவங்கள் மற்றும் பாடங்களைக் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான தலைமைப் பண்புடன் செயல்படுவேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.