புதுடெல்லி: எஃப்ஐஎச் சீரிஸ் ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 5 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

இந்தத் தொடரை இந்திய அணி தடுமாற்றமாக தொடங்கினாலும், அது விரைவாக மீண்டு வந்து, தற்போது தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இறுதிப்போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியானது மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணிக்கான இடத்தை உறுதி செய்வதிலும் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணி ஒவ்வொரு அம்சத்திலும் ஆதிக்கம் செலுத்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி, தற்போது அதையும் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாகம் ரெய்டிற்கு ஒரு முக்கிய திருப்புமுனை கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.