இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியை, மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பத்திரிக்கை.காம் தளத்தின் நிறுவனருமான வாழப்பாடி ராம சுகந்தன் அவர்கள் நேரில் சென்று கண்டுகளித்தார்.

 

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை தொடருக்கான லீக் போட்டி இந்திய நேரப்படி இன்று பகல் 3 மணிக்கு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்டு டிரப்போர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து, ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா 140 ரன்களும், விராத் கோஹ்லி 77 ரன்களும், லோகேஷ் ராகுல் 57 ரன்களும் குவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில், மொகமது அமீர் 3 விக்கெட்களையும், ஹசன் அலி மற்றும் வாகிப் ரியாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இத்தகைய சூழலில், உலக மக்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியை மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பத்திரிக்கை.காம் தளத்தின் நிறுவனருமான வாழப்பாடி ராம சுகந்தன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் இப்போட்டியை கண்டுகளித்து வருவது குறிப்பிடத்தக்கது.