லண்டன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டால், அதன் மூலமான விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு இன்னும் 3.2 ஓவர்களும், கைவசம் 6 விக்கெட்டுகளும் உள்ளன. தற்போதுவரை 305 ரன்களை எடுத்துள்ளது இந்தியா.

இந்நிலையில் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், பாகிஸ்தான் 327 ரன்களை எடுத்தாக வேண்டும். அதேசமயம், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டால், 298 ரன்களை எடுக்க வேண்டும்.

ஒருவேளை, மழை மோசமாக குறுக்கிட்டு, போட்டி வெறுமனே 20 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அப்போது பாகிஸ்தான் அணிக்கான இலக்கு 183 ரன்களாக இருக்கும்.

ஆக, ஓவர்கள் குறைய குறைய பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ரன்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இரண்டு அணிகளுக்குமே உள்ளது என்பதும் முக்கியமான அம்சம்.