இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவனங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

Must read

டில்லி:
னி மனிதரின் ஆவனங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’  சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு.
ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்க கணக்கு விவரங்கள்  போன்ற முக்கிய ஆவனங்களை டிஜிட்டல் முறையில் சேர்த்து வைக்க இந்திய அரசு  ‘மின்பூட்டு’ எனப்படும் (DIGI LOCKER) டிஜிலாக்கர் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளது.
digilocker
நாம் செய்ய வேண்டியது இதுதான்: www.digitallocker.gov.in என்ற இயைண தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்ட படிப்பு சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற முக்கியமான சான்றிதழ்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம், பின்னாளில் நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறை  வேலைக்கு விண்ணப்பித்தால், அதற்கான சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது கிடையாது. அதற்கு பதிலாக உங்கள் ஆதார் அடையாள அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும், அதிகாரிகள் அதன்மூலம் அனைத்து ஆவனங்களையும் சரிபாரத்துக் கொள்வார்கள்.
இதற்கான மொபைல் அப்பும் உள்ளது. அதை டவுன்லோடு செய்து உங்கள் மொபைல் மூலம் உங்கள் ஆவனங்களை அப்லோடு செய்யலாம்.
1digilocker
இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் பெரும்பானவர்கள் இன்னும் பயன்படுத்த முன்வரவில்லை. இளைஞர்களே இனிமேலாவதது இத்தளத்தை  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  இதன் காரணமாக  இனி அரசு வேலைக்கு நேர் காணல் செல்லும்போது எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை வராது என்பது குறிப்பிடத்தக்கது.
https://digilocker.gov.in/

More articles

Latest article