உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

Must read

 டில்லி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள்  மற்றும் கன்ன அமைப்புகள்  தீர்மானித்துள்ளனர்.
Karnataka-bandh

மாண்டியா மாவட்ட பந்த்
மாண்டியா மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி (பந்த்)

உச்சநீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உச்ச நீதி மன்ற தீர்ப்பை  பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன. மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கர்நாடகாவின்  மாண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர்.  மாண்டியா, மைசூரு, சாமராஜ்பேட் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், பெங்களூரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் அ தன் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தி, உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
 

More articles

Latest article