பிசிசிஐ.யின் புதிய ஊதிய ஒப்பந்தம்!! கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி

Must read

மும்பை:

கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஆண்டு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)  கடந்த வாரம் அறிவித்தது. இதில் நிர்ணயிக்கட்ட ஊதிய விகிதத்தினால் சில வீரரர்கள் அதிருப்தியில்  இருப்பது தெரியவந்துள்ளது.

ஊதியம் இரட்டிப்பாக உயர்த்தியுள்ள போதும் வீரர்களின் கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்படவில்லை  என தெரிகிறது. கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்து நியூசிலாந்து தொடர்கள் நடந்தபோதே புதுப்பிக்கப்பட  வேண்டிய புது ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடந்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மைய ஒப்பந்தத்தை, முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்  பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வலியுறுத்தி வந்தார். மொத்த வருவாயில் ஒரு பெரிய பங்கை வீரர்களுக்கு   பிரித்து வழங்கும் வகையில் ஒப்பந்தை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் வழங்கும் முறை  தேவையில்லை என்று வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாக குழுவிடம் வீரர்கள் சார்பில் அனில்கும்ப்ளே புதிய ஒப்பந்த  வடிவமைப்பு குறித்து பெங்களூருவில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். புதிய ஒப்பந்தம் தொடர்பாக நிர்வாக  குழு வீரர்களை அழைத்து பேசும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அத்தகைய சந்திப்பு நிகழவில்லை.

‘‘கும்ப்ளே வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் முழு ஒப்பந்த வடிவமைப்பை மாற்றி அமைக்க  வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செய்ய அதிக காலமாகும்’’ என்று நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

‘‘ஒரே இரவில் இது சாத்தியமில்லை என்பது கும்ப்ளேவுக்கும் நன்றாக தெரியும். அந்த அறிக்கையில் மீது  என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். ஆனால், அது 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி  நேரத்திலோ செய்ய முடியாது. முழு ஒப்பந்த மாதிரியை உருவாக்கி அது குறித்த நீண்ட ஆலோசனை  நடத்த வேண்டியுள்ளது’’ என்று குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் கும்ப்ளே வழங்கிய அறிக்கையில் 32 வீரர்கள் கையெழுத்திட்டு நிர்வாக குழுவிடம்  அளித்தனர். இதன் பிறவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் ஏ கிரேடு ஒப்பந்ததாரர்களான  விராட் கோலி, தோணி, ரஹானே, அஸ்வின் ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி ஊதியம்.

பி கிரேடு ரூ. 1 கோடி, சி கிரேடு வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் என புதிய ஒப்பந்ததில் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி கட்டணமும் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. ஒரு நாள் போட்டி கட்டணம் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டி 20 போட்டிகளுகளுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  2010ம் ஆண்டிற்கு  பிறகு தற்போது தான் முதல் முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. உதவி பயிற்சியாளர்கள் சஞ்சய் பங்கர்  (பேட்டிங்) மற்றும் ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோருக்கும் 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்  மூலம் இவர்கள் மாதத்திற்கு ரூ. 15 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஐபிஎல் போட்டி நடக்கும் இரண்டு  மாதத்திற்கும் இவர்களுக்கு ஊதியம் கிடையாது.

அதோடு டெஸ்ட் போட்டியில் முதலிடம் பிடித்ததற்கு பரிசாக ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 50 லட்சம்,  கும்ப்ளேவுக்கு ரூ. 25 லட்சம், அனைத்து உதவி அலுவலர்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்பட் டுள்ளது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு மில்லியன் டாலரை அணிக்கு வழங்கியுள்ளது.

பிசிசிஐ.க்கு கிடைக்கும் லாபத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறைந்த அளவு  ஊதிய அதிகரிப்பு தான்.  கடந்த 2015&16ம் ஆண்டில் ஆயிரத்து 365 கோடி லாபம் கிடைத்தது, இதில் ரூ.  56.35 கோடி மட்டுமே வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 46.31 கோடி வீரர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இது வாரியத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி உரிமம் வழங்குவதன் மூலம் பெரிய அளவிலான வருவாய் வாரியத்திற்கு கிடைக்கிறது.  2003ம் ஒப்பந்தப்படி மொத்த வருவாயில் 26 சதவீதம் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டி வீரர்களுக்கு  வழங்கப்படுகிறது. இதில் 13 சதவீதம் சர்வதேச ஆண் வீரர்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 10.3  சதவீதம் உள்ளூர் போட்டி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 2.7 சதவீதம் மட்டுமே இளம்  வீரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் பெண் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களோடு ஒப்பிடுகையில் இந்திய வீரர்களுக்கு மிக குறைந்த அளவே  ஊதியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜோய் ரூத் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின ஆண்டு வருவாய்  ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 12 கோடி வரை வழங்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களு க்கு அதிகப்படியாக ஊதியம் வழங்குகின்றன.

ஐபிஎல் போட்டி அறிமுகத்தின் போது குறிப்பிட்ட தொகையை பிசிசிஐ அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.  இதில் வீரர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இதில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒரு       பெரு ந்தொகையை எடுத்துக் கொண்டன.ஐபிஎல் போட்டிக்கு வீரர்கள் பெரும் வருவாயை பிசிசிஐ கணக்கில் எ டுத்துக் கொண்டு தான் ஆண்டு ஒப்பந்தத்தில் ஊதியத்தை உயர்த்த மறுக்கிறது.

இது குறித்து வீரர் ஒருவர் கூறுகையில், ‘‘ஐபிஎல் போட்டிகளில் ஒரு வீரர் 12 கோடி ரூபாய்க்கும், மற்றொரு  வீரர் ரூ. 30 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால், சில வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட  வாய்ப்பு கிடைக்காமல் இருந்தனர். ஐபிஎல் போட்டி வருவாயை பிசிசிஐ ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள  வேண்டும். இதன் மதிப்புகள் வேறுபடும் போது, இரண்டுக்கும் ஏன் வாரியம் தொடர்பை ஏற்படுத்துகிறது  என்பது தெரியவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பிசிசிஐ தான் பணக்கார வாரியமாக உள்ளது. இந்த பணம் கிரிக்கெட் டுக்கும்,வீரர்களுக்கும் தான் பயன்படுத்த வேண்டும். விளையாட்டு அரங்கங்களுக்கு இல்லை’’ என்று  தெரிவித்தார்.

உள்ளூர் போட்டி வீரர் ஒருவர் கூறுகையில்,‘‘ஒரு வீரர் முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால்  ஒரு போட்டிக்கு ரூ. 7.5 லட்சம் கிடைக்கிறது. அதே முதல் தர போட்டியில் நான்கு நாள் போட்டியில் நான்  விளையாடினால் ஒரு போட்டிக்கு ரூ. 40 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதோடு வாரியத்தின் மொத்த  வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது’’ என்றார்.

‘‘உள்ளூர் போட்டி வீரர்களுக்கு பிரத்யேக ஒப்பந்த முறையை ஏற்படுத்த வேண்டும். நிதி ஆதாயம்

காரணமாக தான் முதல் தர வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  அதோடு யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்காக விளையாடலாம் என்ற நிலை இல்லை’’ என்றார்.

More articles

Latest article