இந்திய ஓபன் பேட்மிண்டன்:  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Must read

டில்லி,

ந்திய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

2017ம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் அரை இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில்  தென் கொரிய வீராங்கனை கங்ஜியுடன்  சிந்து மோதினார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அபாரமாக  விளையாடிய சிந்து, 21-18, 14-21,21-14 என்ற கணக்கில் தென் கொரிய வீராங்கனையை  வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து நடைபெற உள்ள  இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

சிந்து ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கின்  இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டு மயிரிழையில் பதக்கத்தை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article