கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், 80 வீரர்கள் ஏலம் எடுக்கப் பட்டுள்ள நிலையில், ஏலம் போகாத இந்திய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

கொச்சியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலப்பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இது மினி ஏலம் என்ற போதிலும் ஏலம் கடுமையாகவே இருந்தது. பெட்னடோக்ஸ், சாம் கரன் உள்பட பல வீரர்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டனர்.   இந்த ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அதிக பட்ச தொகையாக  சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைகு ஏலம் போன வீரர் இவர் தான். இவருக்கு அடுத்த படியாக கேமரூன் க்ரீன் 17.50 கோடி (மும்பை), பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி (சென்னை), நிகோலஸ் பூரன் 16 கோடி(லக்னோ), ஹாரி புரூக் 13.25 கோடி (ஹைதராபாத்), மயங்க் அகர்வால் 8.25 கோடி (ஹைதராபாத்), ஷிவம் மாவி 6 கோடி (குஜராத்) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்  ஜெகதீசனை, சிஎஸ்கே அணி கண்டுகொள்ளாத நிலையில்,  கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. சில வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அதிக விலைக்கு போனார்கள் ஆனால்  பல  ஏலம் போகாமல் இருந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஜோரூட், அடில் ரசித், கை ஜாமிசன், ரஹானே, ஷகில் அல் ஹசன், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடிப்படை விலைக்கே ஏலம் போனார்கள்.  ஆனால், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகாமல் பல  மிக முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளது.

அதன்படி,  இந்திய வீரர்கள்,  வருண் ஆரோன், சந்தீப் ஷர்மா, சஞ்சய் யாதவ், பிரியங் பாஞ்சல், ஸ்ரேயஸ் கோபால், அபிமன்யு ஈஸ்வரன், தினேஷ் பானா, சவுரப் குமார், ஜெகதீசா சுதீப், பாபா இந்திரஜித், பிரியம் கார்க், திரிலோக் நாக் ஆகியோரை நேற்றைய ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

முக்கிய வெளிநாடுகளைச்சேர்ந்த வீரர்களான, டாம் பாண்டென், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டிராவிஸ் ஹெட், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜிம்மி நீஷம், கிறிஸ் லின், டைமல் மில்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், நாதன் குல்டர் நைல், முஜீப் உர் ரஹ்மான், டேரில் மிட்செல், முகமது நபி, டாம் லதாம், மேட் ஹென்றி, இஷ் சோதி, டாம் கர்ரன், கார்லஸ் பிராத்வெய்ட், தசுன் ஷனகா, துஷ்மந்தா சமீரா, பாபியென் ஆலன், கீமோ பால்  போன்றவர்களும் விளைபோகாத நிலையில் உள்ளனர்.

ஐபிஎல் 2023: ஐபிஎல் மினி ஏலத்தில் 7 வீரர்களை எடுத்த சிஎஸ்கே – விவரம்