ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தற்போது போபாலில் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். அங்குள்ள சாலைகளில் போலீஸ் வாகனங்களுக்கு இடையே கமல் குதிரை ஓட்டி போவது போல உள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது .இதனால் படக்குழுவினர் அதிச்சியடைந்துள்ளனர்.