‘பிகில்’ படத்தில் அரசியல் காட்சிகளை நீக்கிவிட்டோம் – எடிட்டர் ரூபன்

Must read

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன், “விஜய் வசிக்கும் பகுதியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியை கிண்டல் செய்யும் வகையில் இருந்த காட்சி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அந்த அரசியல்வாதியை விஜய் சிரித்தப்படியே நக்கல் செய்து மக்கள் வாங்கிய பணத்தை அவரிடமே திரும்ப வாங்கி கொடுப்பார். இந்தக் காட்சியை நீக்கிவிட்டோம்” என்று தனியார் பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் – நயன்தாரா காதல் காட்சி ஒன்றையும் நீக்கிவிட்டதாக ரூபன் கூறியுள்ளனர்.

More articles

Latest article