டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கடந்த  11-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.   இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 4,728 ஆயிரம் குறைவாக உள்ளது.  இதுவரை 2,97,62,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  1,587 பேர் உயிரிலாந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 3,83,490 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 89,977 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647  ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,98,656   பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 26,89,60,399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.