டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,948 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 219 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், (காலை 8 மணி நிலவரம்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 948 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 26,701 வழக்குகள்  கேரள மாநிலத்தில் பதிவாகி உள்ளது.  இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,30,27,621 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,40,752 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,903 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,81,995 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைவோர் விகிதம் 97.42 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 4,04,874 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 68,75,41,762 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,23,089 பேருக்கு தடுப்பூசி செலுததப்பட்டு உள்ளது. மேலும்,  ஒரே நாளில் 14,10,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,14,68,867 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.