டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 3வது அலை பரவல் தொடங்கியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்த வந்த கொரோனா பாதிப்பு அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது.  கொரோனா 3 ஆம் அலை இந்த மாதம் தொடங்கி , அடுத்த மாதம் மத்தியில் உச்சத்தை அடையும் என்று சொல்லப்படும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது . இதற்கிடையில் கொரோனா 3வது அலையில் பாதிப்பு இருக்காது என்றும் மருத்து வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 30,570 ஆக குறைந்திருந்த நிலையில், நேற்று  மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும்  34,403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 37,950 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,25,98,424 பேர் குணமாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 320 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம்  431 பேர்  இறந்த நிலையில் நேற்று  இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44, 248 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 3,39,056  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 77.24 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.