டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல  6,041 ஒமிக்ரான் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மொத்த Omicron வழக்குகள் நேற்றை விட 5.01% அதிகரித்துள்ளது

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நேற்றைய பாதிப்பை விட 4,631 அதிகம்.  தினசரி நேர்மறை விகிதம் 16.66% ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,68,833 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,63,50,962 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 402 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,22,684 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,47,390 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 95.20% ஆக குறைந்துள்ளது

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,17,820 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.48% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 58,02,976 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதுவரை 1,56,02,51,117 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 70,07,12,824*  சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. நேற்று மட்டும், 16,13,740 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதுபோல  6,041 ஒமிக்ரான் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மொத்த Omicron வழக்குகள் நேற்றை விட 5.01% அதிகரித்துள்ளது