டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புதிதாக மேலும் 1,41,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,53,68,372 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 285 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில்,  40,895 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,12,740 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.30% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் 4,72,169 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,50,61,92,903 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 90,59,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கொரோனா சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15லட்சத்து 29ஆயிரத்து 948 சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 68கோடியே 84லட்சத்து, 70ஆயிரத்து, 959 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.