சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி  அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் மேலும் 1,41,986 பேர் புதிக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்று பரவலும் 3071 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3,071 ஆக பதிவாகியுள்ளது. அவர்களில் இதுவரை 1203 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒமிக்ரான் பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தொடர்கிறது. அங்கு இதுவரை  876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 381 பேர் குணமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் கர்நாடகா உள்ளது, அங்கு 333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும்,  தமிழ்நாட்டில் 121 , குஜராத்தில் 204, கேரளாவில் 284   , ராஜஸ்தானில் 291 , தெலுங்கானாவில் 123 என மொத்தம் 3,071  பேருக்கு தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.