புதுடெல்லி:

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம், மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது  இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ‘வயர்’ இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:

வேலை இல்லாத திண்டாட்டத்தின் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் என்ற அரசின் விளக்கத்துக்கு பொருளாதார நிபுணர்கள் சில மாதங்களுக்கு முன்பு பதில் அளித்திருந்தனர்.

இளைஞர்கள் நல்ல கல்வி பெற்றும் வேலை இல்லாத திண்டாட்டம் மோசமான நிலையில் உள்ளது. விவசாயம் சாராத துறைகளில் பணியாற்ற இவர்கள் விரும்புகிறார்கள்.

2015-16-ம் ஆண்டு வீடுகள்தோறும் 5 ஆண்டுகள் வேலை இல்லாத திண்டாட்டம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் சர்வே செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டிலிருந்து கிடைத்த இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சர்வே தரவுகளை பயன்படுத்தியும் தேசிய மாதிரி சர்வே அமைப்பின் தரவுகளின் அடிப்படையிலும், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா துறைகளின் வேலை வாய்ப்பு பற்றி ஆராயப்பட்டது.

முத்ரா திட்டத்தில் கடன் வழங்கியதையும், தெரு வியாபாரம் நடத்துவதையும் வேலை வாய்ப்பு என முந்தைய சர்வே கூறுகிறது.

அடுத்த 2 சர்வேக்களில் மட்டுமே வேலை வாய்ப்பு அளித்த விசயத்தில் அரசுக்கும் தரவுகளுக்குமான வித்தியாசம் தெரிகிறது. வேலை வாய்ப்புகள் எவை என்பதற்காக அரசு கூறும் விளக்கம் ஏற்புடையதல்ல.
2011-12 ம் ஆண்டுகளுக்குப் பிறகு வேலை இல்லாத திண்டாட்டம் சிறிதளவே உயர்ந்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் குறித்த சர்வே வெளியே கசிந்திருப்பதாக கூறுவது இதிலிருந்துதான். இதன் பிறகுதான் மக்கள் வேலை இல்லாத திண்டாட்டம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

கசிந்த அந்த தரவுகளின் அடிப்படையில், 1977-78 மற்றம் 2011-12 ஆண்டுகளில் 2,6 சதவீதம் இருந்த வேலையில்லா திண்டாட்டம், 2017-18-ல் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கால கட்டத்தில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும் 2016-ல் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய நகர்ப்புற இளைஞர்கள் விவசாயம் தவிர ஏனைய துறைகளில் நிரந்தர வேலையை எதிர்பார்க்கிறார்கள்.

கசிந்த தரவுகளின் அடிப்படையில், வெளிப்படையான வேலை இல்லாத திண்டாட்டம் தான் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது,
15 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சக்தி கிடைக்காததும், இத்தகைய வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிவதற்கு காரணம் என்று அரசு தரவுகள் கூறுகின்றன.

ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தி ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் உயர்ந்ததில்லை. வெளிப்படையான வேலை இல்லா திண்டாட்டம் 2011-12 வரை 1 கோடி பேராக இருந்தது. 2015-16-ல் இது 1 கோடியே 65 லட்சமாக உயர்ந்தது.

2005 ஆண்டிருந்து 2011-12 வரை 90 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என தேசிய மாதிரி சர்வே அமைப்பின் தரவு கூறுகிறது.
விவசாயம் குறைந்துபோனால் கூட, விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வந்துள்ளது.

2004-2014 வரையிலான கால கட்டத்தில் வேலை வாய்ப்பு குறைந்த அளவிலேயே இருந்துள்ளது.
பணம் மதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய பிறகு, வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.

உற்பத்தி சார்ந்த வேலை வாயப்புகள் கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 6 லட்சமாக குறைந்துள்ளது.
உற்பத்தி சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு குறையும் போது அது நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும்.

2017-18-ம் ஆண்டுகளில் 10 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போயிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.