கொல்கத்தா:

முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவின் நிறுவனங்களில் கொல்கத்தா போலீஸார் ரெய்டு நடத்தினர்.


தற்காலிக சிபிஐ இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர்.

அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், அவர்களை விடுவித்தனர்.

இந்நிலையில், சீட்டு மோசடி வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், கைது நடவடிக்கை கூடாது என சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நாகேஸ்வரராவின் மனைவி மற்றும் மகளின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் கொல்கத்தா போலீஸார் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டில் பல ஆதாரங்கள் சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.