சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்தியா 337 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதன்மூலம் ஃபாலோஆன் ஆனது. ஆனால், வாஷிங்டன் சுந்தர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களைக் குவித்தது. பின்னர், தனது இன்னிங்ஸை இந்தியா துவக்கியபோது, ரோகித், கோலி, ரஹானே போன்றோர் மிகவும் பொறுப்பற்று ஆடினர். ஆனால், புஜாரா, ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் போன்றோர் பொறுப்புடன் ஆடினர்.

புஜாரா 73 ரன்களும், ரிஷப் பன்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும், அஸ்வின் 31 ரன்களும் எடுக்க, இந்தியா 337 ரன்கள் என்ற கெளரவமான எண்ணிக்கையை எட்டியது. ஆனாலும், ஃபாலோஆன் ஆனது இந்திய அணி. ஆனால், இங்கிலாந்து அணி பாலோஆன் கொடுக்காமல், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளும், ‍ஆர்ச்சர், ஜேக் லீச், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.