நகை கடைகளில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! ரூ.25 கோடி பறிமுதல்….?

Must read

சென்னை,
சென்னையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டால் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் 25 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
raid
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்றி வருகின்றனர் ஒருசில்ர். இதற்கு அநேக நகைக்கடைகள் ஒத்துபோகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் அதிரடியாக சரவனுக்கு ரூ.1500 வரை உயர்ந்தது.
8ந்தேதி இரவு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததுமே, பொதுமக்கள் நகைக்கடைகளை முற்றுகையிட்டனர். தங்களிடம் இருந்த பணத்துக்கு தேவையான அளவு தங்கத்தை வாங்கி குவித்தனர்.
 
மக்கள் தங்களிடமிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தங்கமாக மாற்றுவதில் மும்முரமாக செயல்பட்டனர்.
radi1
இதைத்தொடர்ந்து, தங்கம் வாங்குபவர்கள் பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், வருமான வரித்துறையினரும் இதை கண்காணித்து வந்தனர்.
இதன் காரணமாக அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். இந்த ரெய்டு மூலம் கணக்கில் வராத மொத்த பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பாரிமுனை உட்பட வடசென்னை பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், ஹவாலா பணம் மாற்றும் நபர்களின் வீட்டில் நேற்று தொடங்கி 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை ரூ. 25 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

More articles

Latest article