தமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

Must read

 
சென்னை:
மிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே  ரூ.1,300 கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.
rupees3
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 9ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள்  வியாபாரிகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மேலும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. வங்கி ஏடிஎம்களும் 2 நாட்கள் செயல்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் வங்கிகள் செயல்பட துவங்கின. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வந்தனர். ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.
rupeps2
இந்நிலையில் தமிழகத்தில் 2 நாளில் மட்டும் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியதாவது:
ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மட்டும் ரூ.1,300 கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர்.
வங்கிகளில் மாற்றப்பட்ட பழைய நோட்டுக்கள் எவ்வளவு என்பது வரும் 14ந் தேதி தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புழக்கத்தில் உள்ள 2,300 கோடி அளவிலான பழைய நோட்டுக்கள் அழிக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் இந்தியா முழுவதும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ஸ்டேட் வங்கி தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article