மேகாலயா மாநிலம் ஷில்லாங் பிராந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளது.

‘பிரளை’ (Pralay) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியில் Su-30 மற்றும் ரபேல் ரக போர்விமானங்கள் தவிர S-400 ரக வான்பாதுகாப்பு விமானங்கள் மற்றும் ராணுவ தளவாட விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட உள்ளது.

இதுதவிர ட்ரோன் விமானங்களும் பயிற்சியின் போது ஈடுபடுத்தப்பட உள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எல்லைக்கு அப்பால் 400 கி.மீ. தூரத்தில் இருந்து வரும் தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீன எல்லையில் அந்நாட்டுத் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா தனது ‘பிரளை’ பயிற்சியை துவக்க இருக்கிறது.

ஏற்கனவே டிசம்பர் 15 ம் தேதி இதேபோன்ற ஒரு பயிற்சி நடைபெற்ற நிலையில் தற்போது நாட்டின் பிற பிராந்தியங்களில் இருந்து டிரோன்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புடன் மீண்டும் ஒரு பயிற்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.