ராஜஸ்தான் : ஏ டி எம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Must read

நைன்வான்

ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்னும் இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

ராஜஸ்தான் நைன்வான் பகுதியில் உள்ள செண்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏ டி எம் ஒன்று உள்ளது.   இந்த ஏ டி எம்மில் புகுந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தை பெயர்த்து பீரோவை நகர்த்துவது போல நகர்த்தி எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை ஏ டி எம் மில் இருந்த சி சி டி வி காமிராவில் பதிவாகி உள்ளது.   அந்த இயந்திரத்தில் சுமார் ரூ. 5 லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

சிசிடிவி பதிவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்

More articles

Latest article