பம்பா,

பரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதையடுத்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றனர்.

கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்று பிற்பகல் திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். இந்த பூஜைகளை முன்னிட்டு இவ்வருட மண்டலகால பூஜைகள்  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகால பூஜைகளுக்காக  நடை திறக்கப்பட்டது.

சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ்மோகனன் முன்னிலையில் மேல்சாந்தி டி.எம்.உண்ணிகிருஷ்ணன்  கோவிலின் நடையை  திறந்தார்.

அதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இவ்வருடம் புதிய மேல்சாந்தியாக ஏ.வி.உண்ணிகிருஷ்ணன், மாளிகைபுரம் மேல்சாந்தியாக அனிஷ் நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்றார்கள்.

கார்த்திகை 1ம் தேதியான  இன்று முதல் மண்டலகால பூஜைகள் தொடங்கி, டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.