சென்னை

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரு.960 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.