இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.: தர்மபுரியில் பொறுப்பேற்றார்

Must read

 

சேலம்:

சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றார்.

சேலத்தைச் சேர்ந்த திருநங்கை  பிரித்திகா யாசினி கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.  இதில் அவர் தேர்ச்சி பெற்றதன் மூலம்,  இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை பெற்றார்.

அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார். இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பணி நிறைவு விழாவில் அவருக்கு எஸ்.ஐ. பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.  இப்போது  எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

More articles

Latest article