இந்தியாவில் 38 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக்குன்றி காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருபது  வயதுக்குட்பட்ட பெண்கள் விரைவில் தாய்மை அடைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று  உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டிற்கான குழந்தைகளில் வளர்ச்சி குறித்து 175 நாடுகளில் என்.ஜி.ஓ. ஆய்வு நடத்தியது. இதில் 38சதவிகித குழந்தைகள் 5 வயதிற்கு ஏற்ற வளர்ச்சியை அடையவில்லை எனவும், அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை கடந்த ஆண்டை விட 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது வருத்தமளிக்க கூடிய ஒன்று. வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நோய்தொற்றுக்கு ஆளாவதுடன், மூளை வளர்ச்சி பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர். வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எடை குறைவாக காணப்படுவதாக  உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக தேசிய சுகாதார அமைப்பு நாடு முழுவதும் 1000 மறுவாழ்வு மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுகின்றன.   20வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமடைவதை தடுப்பது மிகபெரிய சவாலாக இருகிறது என இந்த அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. உதாரணமாக ஆயிரம் பெண்களில் 23 சதவிகிதத்தினர்  20வயது நிரம்பாத நிலையில் தாய்மை அடைந்துள்ளதாக  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது