முகநூலில் பரவி வரும் #அன்ஃப்ரெண்ட் பிஜேபி ட்ரெண்ட்

Must read

டில்லி

த்துவாவில் எட்டு வயது சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து முகநூலில் பாஜகவினரின் நட்பை முறிக்கும் #அன்ஃப்ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) பரவி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்,   உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.    அதை ஒட்டி முகநூலில் உள பலரும் பாஜக உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர்.

இதற்காக #அன்ஃப்ரெண்ட் பிஜேபி என்னும் ஹேஷ்டாக் உபயோகம் பரவலாகி வருகிறது,   இதன் மூலம் கத்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் பாஜகவினரை நண்பர்கள் பட்டியலில் இருந்து பலர் நீக்கி வருகின்றனர்.   மேலும் தங்கள் நண்பர்களையும் பாஜகவினரை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.   கிருஷ்ணகுமார் என்பவர், “உங்கள் கரங்களில் இரத்தக் கறை படிந்துள்ளது.    எனவே உங்கள் நட்பு தேவை இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி இது குறித்து தனது மௌனத்தை கலைத்தார்.  அவர் இந்த சம்பவங்கள் வெட்கப்படத் தக்கவை என கடும் கண்டனத்தை தெரிவித்தார்.   ஆனால் அதே தினம் பாஜகவை செர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி, ஆசிஃபாவை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு பாஜக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்துக் கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article