கொச்சி:
நாட்டிலேயே முதன்முறையாக போர்க்கப்பலில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
கேரளமாநிலம் கொச்சியில் உள்ள ஐ என் எஸ் சர்வக்சா என்ற போர்க் கப்பல் தென்மண்டல கப்பற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பலின் மேல்புறத்தில் 18 சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிர்மாணிக்க 6 மாதங்கள் ஆனதாகவும், இதன்மூலம் மின் விளக்குகளும், இரண்டு குளிர்சாதன பெட்டிகளும் இயங்குவதாக கப்பலின் கேப்டன் ராஜேஷ் பர்கோடி தெரிவித்தார். உப்புக் காற்று, ஈரப்பதம், அதிக விசையுடன் கூடிய புயல்காற்று போன்றவைகளால் சூரிய மின்தகடுகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. அதனால் அனைத்துச் சூழலுக்கும் ஏற்ற சூரியமின் தகடுகள் விரைவில் பொருத்தப்படும் என்றார்.
மேலும் இரவு நேரங்களில் கடலில் சுற்றிவரும்போது மட்டும மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாகவும், மின்அளவி மூலம் சூரியமின் ஆற்றல் அளவிடப்படுவதாகவும் தெரிவித்தனர். மேற்கொண்டு எந்தச் சாதனங்களில் சூரிய மின்னாற்றலை பயன்படுத்த முடியும் என்று ஆலோசித்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.