சென்னை:
பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை முதல்வர் மு. க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதையடுத்து,  பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்துவருகிறது.
அப்போது பேசிய முதல்வர் மு. க.ஸ்டாலின், பாரதியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார் என்றும், பாரதியார் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்று தெரிவித்தார்.
குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், சதியாக இருந்தாலும், அடக்குமுறைகளைக் கேள்வி கேட்டவர் பாரதியார் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,  பாரதியார் அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும், மக்கள் மனதில் உள்ள நினைவுகளை வைத்து மீண்டும் புத்தகம் படிக்கலாம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,  பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.