இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் ஜீவா நடித்து வரும் படம் ‘சீறு’ .

ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் , வில்லனாக பிரபல நடிகர் நவ்தீப் நடித்து வருகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இளைய மகன் சிவம் மகாதேவன் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகம் ஆகிறார். சிவம் மகாதேவன் பாடிய பாடலை விவேகா எழுதியுள்ளார்.