சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் இந்திய வீராங்கனையாநடித்துள்ளார் தமன்னா .

தமன்னாவின் நடிப்பிற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. தமன்னாவின் நடிப்பை பாராட்டும் விதமாக ராம் சரணின் மனைவி உபஸனா தமன்னாவுக்கு ஒரு பெரிய வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

இந்த வைர மோதிரம் உலகில் 5 வது பெரிய வைர மோதிரம் என்று கூறுகிறார்கள். இதன் விலை சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .