டில்லி

சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதஞ்சலி நிறுவன கொரோனா மருந்து அறிமுக நிகழ்வில்  கலந்து கொண்டதற்கு இந்திய மருத்ஹ்டுவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனாவை குணப்படுத்த கொரோனில் என்னும் மருந்தை அறிமுகம் செய்தது.   இந்த மருந்தின் அறிவியல் ஆதாரங்கள் மீது எழுந்த சந்தேகங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அதே மருந்து தற்போது மீண்டும் கொரோனில் கிட் என்னும் பயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.  இந்த தகவலாக் அதிர்ச்சி அடைந்த உலக சுகாதார நிறுவனம்,க்ரோனா சிகிச்சைக்கு எந்த ஒரு பாரம்பரிய மருந்துகள் குறித்து ஒப்புதல் அளிக்கவோ ஆய்வு செய்யவோ இல்லை என விளக்கம் அளித்தது.

இத்தகைய ஒரு தவறான தகவல் அளித்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துக் கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  இந்திய மருந்துவ சங்கம் இது குறித்து,” கொரோனில் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் எனில் 35,000 கோடி ரூபாய் செலவில் எதற்கு அரசு தடுப்பூசி போடுகிறது.  ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக உள்ளவர்  இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வது சரியான அணுகுமுறையா?

சென்ற ஆண்டு உலக சுகாதார நிறுவன தென் குழக்கு ஆசியப்பிரிவு நிர்வாகக் குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ் வ்ர்தன் இதே நிறுவனம் ஒப்புதல் அளிக்காத ஒரு மருந்தை எவ்வாறு வெளியிட்டார்.  இது இந்திய மருத்துவர்களுக்கு மட்டும்  இன்றி மக்களுக்கும்  ஒரு அவமானம்”  என கடும் கண்டனம் எழுப்பி உள்ளது.