டெல்லி: நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனும‌தி கேட்டு சமுக ஆர்வலர்  மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரலுக்கு   கடிதம் எழுதிஉள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ள. நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதித்துறைக்கு  அதிகாரிகளை நியமனம் செய்வது போல் நீதிபதிகளை நியமனம் செய்யாதீங்க என்று பேசினார்.  இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர சமூக ஆர்வலர் ஒருவர் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி கே‌ட்டு,  கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில்,  உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரே, இந்திய நீதித்துறையை அவமதித்ததை ஒருபோதும் ஏற்க முடியாது , நீதித்துறையை அவமதித்த காமெடி நடிகர் குனால் கர்மா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தது போல், ரஞ்சன் கோகோய் மீதும் வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், சமுக ஆர்வலரின் கடிதத்துக்கு பதில் தெரிவிக்க முடியாது என   அட்டர்னிஜி ஜெனரல் அலுவலகம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.