மனோஜ் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்க இருக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

பாரதிராஜா-வின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மார்கழி திங்கள்’

இந்தப் படத்தின் கதாநாயகனாக இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்க உள்ளார்.

‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதை அடுத்து பாரதிராஜா, மனோஜ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.