இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுப்பு

Must read

சென்னை:
ளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளங்கோவன் 2014 முதல் 2020 வரை பதவியிலிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், 2014ஆம் ஆண்டு இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சம். ஆனால் 2020-ஆம் ஆண்டுக் கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு ரூ. 5.6 கோடியாக உள்ளது. மாத வருமானத்தை வைத்துப் பார்த்தால் அவரது சொத்து மதிப்பு ரூ. 2.88 கோடி மட்டுமே இருக்க வேண்டும். பதவியிலிருந்த காலத்தில் ரூ. 5.30 கோடி சொத்து சேர்த்துள்ளார். இதில் ரூ.1.35 கோடி செலவு செய்துள்ளார். சேமிப்பில் ரூ. 1.52 கோடி வைத்துள்ளார்.
3.78 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதாவது, வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணத்தைக் கல்வி நிலையங்களில் முதலீடு செய்தும், பினாமி பெயரில் சொத்து வாங்கியிருப்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இளங்கோவன் வீட்டில் சோதனை நடந்த சோதனையில் 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article