சென்னை: 
மிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் எனப் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த இரண்டு குளங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு குளங்களுக்கும் வண்ண குளம்’ என்று பெயர் மாற்றி அமைக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.