சென்னை

நாளை மறுநால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதையொட்டி மாநிலம் எங்கும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.   இதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்

இந்த கூட்டத்தில் முதல்வர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

காலை 10 மணிக்குச் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையடுத்து வரும் 26 ஆம் தேதி மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.