சென்னை

மிழகத்தில் சலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துரை அமைச்சராக எ வ வேலு பொறுப்ப்பாற்ரி வருகிறார்.  இவர் இன்று தலைமைச் செயலகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்தினார்.  இதில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் வேலு, “தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில்தான் விபத்து நேரும் இடங்கள் கரும்புள்ளிகள் (Black Spot)  அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு (TRW) மூலம் அடையாளம் காணப்படுகின்றன. கரும்புள்ளிகள் என அடையாளம் காணப்பட்டு விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மீண்டும் விபத்துகள் நடைபெறாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

டில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலத் தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கும் டெல்லியிலுள்ள அலுவலர்களை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாலை பாதுகாப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். முக்கிய சந்திப்புகள் மற்றும் வளைவான இடங்களில் எல்லாம் சூரியசக்தி விளக்குகளைப் பொருத்தி விபத்து நடக்காத வகையில் சாலை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.