இயக்குனர் கே விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

’80 – ’90 களில் இந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த இயக்குனர் கே. விஸ்வநாத் வயதுமுதிர்வு காரணமாக தனது 93 வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

53 படங்களை இயக்கியுள்ள இவர் 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார், 7 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் 10 முறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.

1980 ம் ஆண்டு வெளியான சங்கராபரணம் திரைப்படம் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற கே விஸ்வநாத் தெலுங்கு மட்டுமன்றி ஹிந்தி மொழி படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சுவாதி முத்தியும் (சிப்பிக்குள் முத்து) உள்ளிட்ட பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கும் வெற்றிபெற்றது.

இவரது மறைவுக்கு இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.