சென்னை:  கோவையைச் சேர்ந்த தமிழரான செந்தில்குமார், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும்  ஐஐஎஸ்பி (IISB) எனும் பெயரில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்நிறுவனம்,  தற்போது சில மாநிலங்களில் தேர்தல் களப்பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கால் பதிக்க உள்ளது.

கோவை தமிழர் உருவாக்கி உள்ள ஐஐஎஸ்பி (IISB) நிறுவனம். அதாவது இன்ஜீனியஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ (IISB – ingenious indian strategic bureau). நிறுவனத் தின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. அதன் கிளைகள் சென்னை, கோவை மற்றும் மும்பையிலும் செயல்படுகிறது.

2024ம்ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த தேர்தலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த இன்ஜீனியஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ வின் (IISB) பங்கு தவிர்க்க முடியாதது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வி.எஸ்.செந்தில் குமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளர்.

இன்றைய டிஜிட்டல் உலகில், மக்களை திசை திருப்பவும் மூளைச்சலவை செய்யவும் சமூக வலைதளங்கள் அரிய பணியாற்றி வருகின்றன என்பதை மறந்துவிட முடியாது. அதுபோன்ற ஒரு பணியைத்தான் தேர்தல் வியூக வகுப்பாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே களத்தில் உள்ளவர்களை  மிஞ்சும் வகையில், ஊடகத் தொழில் அனுபவங்களைக் கொண்டு,  இந்திய அரசியல் கள நிலவரத்தை அக்குவேறு அணிவேறாக அறிந்து கொண்டு, மக்களின் மனநிலை என்ன என்பதை துல்லியமாக கணித்து  தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார் IISB செந்தில் குமார்.

யார் இந்த செந்தில் குமார்?

தமிழ்நாட்டின் பல முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் மட்டுமின்றி,  முன்னணி தொலைக்காட்சியின் துணைத் தலைவ ராகவும், வடிவமைப்பு இயக்குநராகவும், தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம்  கொண்டவர் செந்தில்குமார்.

20ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய செந்தில்குமார் முன்னணி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், வாழ்வியல் நெறியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்  என அனைத்து முன்னணி நபர்களையும் பிரத்யேக பேட்டி கண்ட அனுபவம் கொண்டவர்.

இதுமட்டுமின்றி,   முன்னணி  நிறுவனங்களின் விளம்பரங்களை உருவாக்கி பிரபலமடைந்தவர். மேலும், தேர்தல் சமயங்களில், தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று களநிலவரத்தை வெளிப்படுத்தி, அங்கே வெற்றிபெறப்போவது யார் என்பதை துல்லியமாக கணித்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்களிடை யேயும்  பெரும் வரவேற்பை பெற்றவர்.

தனது தொழில்திறமையால் பல்வேறு வெற்றிகளை குவித்த வி.எஸ்.செந்தில்குமார், தற்போது இன்ஜீனியஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ (IISB) நிறுவனத்தை தொடங்கி தேர்தல் வியூக வகுப்பாளராக அரசியல் களத்தில் இறங்கி உள்ளார்.

இந்நிறுவனம் (IISB) 2024 நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய அரசியல் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக களமிறங்க தயாராகி வருகிறது. தற்போது தனது பணியாளர்களைக் கொண்டு  சில மாநிலங்களில் தேர்தல் நிலவரங்களை கவனித்து வருகிறது. அம்மாநில மக்களின் தேவைகள் என்ன, உணர்வுகள் என்ன, அவர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்பது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

மக்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் விதமாகவும், அதைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இவர்கள் கடந்த தமிழக தேர்தலில் வகுத்த வியூகம் பெருவாரியான தொகுதிகளில் இவர்கள் களப்பணியாற்றிய வேட்பாளர்களை வெற்றியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த தமிழக தேர்தலில் IISB நிறுவனம் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு களமிறங்கி வகுத்த வியூகங்களால், இவர் களப்பணி யாற்றிய 10 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர, பிற அனைத்து வேட்பாளர்களும் வெற்றி கனியைப் பறித்துள்ளனர் என்பதே, அவர்களின் திறமைக்கு சான்று.

தற்போது தேர்தல் வியூகம் வகுப்பும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள ஐஐஎஸ்பி (IISB) நிறுவனம்,   பல முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய திறமை வாய்ந்த இளைஞர்கள், சிந்தனையாளர்கள், முன்னணி விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய கிரியேட்டிவ் அதிகாரிகள் போன்றவர்களுடன் இணைந்து தனது பணியை தொடங்கி உள்ளது. மேலும் இவரது குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சிந்தனையாளர்கள், ஸ்ட்ராடிஜிஸ்ட்கள், பொருளாதார நிபுணர்கள், என்.ஜி.ஓக்களில் பணியாற்றும் களப்பணியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி, செய்திதாள்களில் பணியாற்றும் நிருபர்கள் என பல தனித்திறமை வாய்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் பிரச்சார வியூகங்கள், DATA Research, அரசியல் தலைவர்களுக்கு நற்பெயரை தொகுதி வாக்காளர்களிடையே பெற்று தரும் விளம்பர யுக்திகளுக்காகவும் பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளதுதான் IISB நிறுவனம்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிவிப்புகள் தொகுதியின் கடைக்கோடி வாக்காளர்களையும் சென்றடையும் விதத்தில் தனது பிரச்சார யுக்திகளை சமூக வலைத்தளங்களில் துவங்கி, இன்றைய டிஜிட்டல் யுகத்திற்காக யுக்தியைப் பயன்படுத்துவது வரையில் இவரது (IISB)  வியூகம் பிரமிக்க வைக்கிறது.

கோவையைச் சேர்ந்த ஐஐஎஸ்பி (IISB)  நிர்வாகி செந்தில்குமார், கர்நாடக மாநிலத்தில் 10ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளதால், தற்போது தனது நிறுவனத்துடன் கர்நாடக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார். இதில் இவருக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என  எதிர்பார்ப்பு உள்ளது.

வட இந்திய தேர்தல் வியூக நிறுவனங்களுக்கு சவால் விடும், தமிழக நிறுவனமான ஐஐஎஸ்பி (IISB)  வெற்றிபெற பத்திரிகை டாட் காம் இணையதளம் வாழ்த்துகிறது.

ஐஐஎஸ்பி (IISB) பற்றி முழு விவரம் பெற கீழே உள்ள இணையதளத்தை அணுகவும்…

https:///www.iisb.in