​ஓட்டுப்போட்டால் "கோ -2"  திரைப்படம் இலவசம் 

Must read

ko
கடந்த 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா  ஹீரோவாக  நடித்து “கோ” திரைப்படம் வெளியானது.  இதன்  இரண்டாம் பாகம்,  கோ 2 என்ற பெரயில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.   பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, சரத் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ள  ஆர்.எஸ். இன்ஃபோடெயிண்மெண்ட்  நிறுவனம், “  மே 16 அன்று வாக்களித்துவிட்டு  விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும்  முகவரியை ஒரு எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு கோ 2 படத்துக்கான  தலா இரண்டு டிக்கெட்டுகள் வீடு தேடி வரும்” என்று அறிவித்துள்ளது.
 

More articles

Latest article