வியாபாரத்தந்திரம் உள்ளவர் என்றாலும், மிக மிக நல்ல மனிதன்! : ரஜினிக்கு பாலகுமாரன் சர்டிபிகேட்

Must read

a
எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான  பாலகுமாரன், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.  அது குறித்து  தனது முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவு:
“மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸடார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது.
என் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.
அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன. மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்.
நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”

More articles

Latest article