புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில்(ஐசிஎம்ஆர்) பணியாற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த கட்டடம் சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த அந்த ஆராய்ச்சியாளர், சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வரவேண்டியிருந்தது. அப்போது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர், மும்பை ஐசிஎம்ஆர் -இல் பணியாற்றுகிறார். இவர், கோவிட்-19 தொடர்பாக பணியாற்றிவரும் முதன்மைக் குழுவின் உறுப்பினர் என்றும், ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவாவுடனான ஒரு சந்திப்பிற்காக டெல்லி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அவர் இருந்த கட்டடம், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு தனித்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.